ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த சீசனில் அறிமுகமாகி அட்டகாசமாக விளையாடி வரும் அணி தான் குஜராத் டைட்டன்ஸ். இந்த அணி தான் கடந்த ஆண்டும் கோப்பையை வென்றது. கடந்த சீசனை போல இந்த சீசனிலும் அருமையாக விளையாடி வருகிறது.
இந்த சீசன் விளையாடிய இரண்டு போட்டிகளில் அதிரடியாக விளையாடி புள்ளி விவர பட்டியலில் குஜராத் அணி தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்நிலையில். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் குஜராத் கிரிக்கெட் அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
அது என்ன சாதனை என்றால், ஐபிஎல் வரலாற்றில், குஜராத் டைட்டன்ஸ் அணிஇதுவரை சேசிங் ( Chasing) செய்த 10 போட்டிகளில், 9 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளது. மும்பைக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்துள்ளது.
9 முறை ஐபிஎல் போட்டியில் சேசிங் ( Chasing) செய்து வெற்றிபெற்ற ஒரே அணி என்ற சாதனையை குஜராத் அணி படைத்துள்ளது. மேலும் குஜராத் அணி வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி கொல்கத்தா அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.