விராட் கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு farewell நிகழ்ச்சி! ஆஸி கிரிக்கெட் வாரியம் திட்டம்!!

ஆஸ்திரேலியா செல்லும்போது ரோஹித், கோலிக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடத்த ஆஸி நிர்வாகம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

RO KO CRICKET

ஆஸ்திரேலியா :  கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு விடைபெறல் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரில் விளையாட உள்ள நிலையில், இது அவர்களின் கடைசி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணமாக இருக்கலாம் என கருதப்படுவதால், இந்த விழாவிற்கு திட்டமிடப்பட்டுள்ளது கூறப்படுகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி டாட் கிரீன்பர்க், இந்த விடைபெறல் நிகழ்ச்சி குறித்து பேசுகையில், ரோஹித் மற்றும் கோலி ஆகியோரின் கிரிக்கெட் உலகிற்கு ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமையும் என்று கூறியுள்ளார். “இது அவர்களை ஆஸ்திரேலிய மண்ணில் காணும் கடைசி வாய்ப்பாக இருக்கலாம், எனவே அவர்களுக்கு மறக்க முடியாத விடைபெறலை அளிக்க விரும்புகிறோம்,” என கூறியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை முடித்துவிட்டு, அடுத்ததாக வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடரின் போது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த விடைபெறல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் மறக்க முடியாத வெற்றிகளை பதிவு செய்துள்ளது, மேலும் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த விடைபெறல் நிகழ்ச்சி குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், ஆஸ்திரேலியாவின் இந்த முயற்சி, இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் உறவை மேலும் வலுப்படுத்தும் என கருதப்படுகிறது. ஒரு பக்கம் ஆஸி மண்ணில் இவர்களுக்கான நிகழ்ச்சி நடைபெற்றாலும் கூட மற்றோரு பக்கம் இருவரும் சீக்கிரம் ஓய்வு பெறப்போகிறார்களா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளது .

கடந்த ஆண்டு கம்பீர், ரோஹித் மற்றும் கோலி இருவரும் உடற்தகுதி சரியாக இருந்தது என்றால் 2027 உலகக் கோப்பையில் விளையாட முடியும் என்று பேசியிருந்தார். அதைப்போலவே, விராட் கோலி கண்டிப்பாக 2027 உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவேன் எனவும் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்