“தோனியிடம் இருந்து கில் கற்றுக்கொள்ள வேண்டும்” – முன்னாள் பயிற்சியாளர் அறிவுரை.!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் அறிவுரை வழங்கியுள்ளார். 

Shubman Gill - Gary Kirsten

டெல்லி : இந்திய அணியின் புதிய கேப்டனாக ஆனதிலிருந்து சுப்மான் கில், இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மூன்று சதங்களை அடித்துள்ளார். இருப்பினும், கேப்டன் பதவி இன்னும் ஒரு கட்டத்திலேயே உள்ளது. இதனால், இந்தியாவின் முன்னாள் உலகக் கோப்பை வென்ற பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், கில் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் தொடக்க வீரரும், 2011 உலகக் கோப்பையை வென்ற இந்தியாவின் பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன், கில் தோனியைப் போல ஒரு நல்ல மேலாளராக மாற வேண்டும் என்றார். 2022 முதல் 2024 வரை குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சிக் குழுவில் கிர்ஸ்டன் இருந்ததால், கில்லை நெருக்கமாகப் பார்த்துள்ளார்.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக கில் பற்றி பேசிய கேரி கிர்ஸ்டன்,”இது வெறும் ஆரம்பம் தான். அவருக்கு நிறைய திறமைகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். கேப்டன் பதவியில் பல விஷயங்கள் உள்ளன. அவர் விளையாட்டை நன்கு புரிந்துகொள்கிறார், அவரே ஒரு நல்ல வீரர்.

ஆனால், ஒரு கேப்டனாக மிக முக்கியமான விஷயம் மக்களை சரியாக நிர்வகிப்பதுதான். சொல்லப்போனால் சுப்மன் கில் தற்போதுதான் கேப்டன் பதவியில் தனது ஆரம்ப கட்டத்தில் இருக்கிறார், எனவே அவர் தோனியிடம் இருந்து அறிவுரைகளை கேட்டுப் பெறவேண்டும். தோனியை விட வீரர்களை சிறப்பாக கையாளும் கேப்டனை நான் பார்த்தது கிடையாது. கில் இந்த விஷயத்தில் வலிமையானவராக மாறினால், அவர் இந்தியாவின் சிறந்த கேப்டனாக முடியும்” என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

டெஸ்ட் கேப்டனாக தனது முதல் தொடரை கில் சிறப்பாகத் தொடங்கினார். ஹெடிங்லி டெஸ்டில் அவர் 147 ரன்கள் எடுத்தார். இதன் பிறகு, எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில், அவர் 269 மற்றும் 161 ரன்கள் எடுத்து அற்புதமான இன்னிங்ஸ்களை விளையாடி, இந்தியா தொடரை 1-1 என சமன் செய்ய உதவுவதில் முக்கிய பங்கு வகித்தார்.  இப்போது இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான அடுத்த போட்டி மான்செஸ்டரில் ஜூலை 23 புதன்கிழமை முதல் நடைபெறும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்