இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாள் சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியை நேரில் பார்க்கவேண்டும் என பல கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்தின் காத்துள்ளனர்.
எனவே, போட்டியை பார்க்க பலரும் வருகை தருவார்கள். இதன் காரணமாகவே நாளை ஒரு நாள் மட்டும் அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானம் வரை இலவசமாக சிற்றுந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த இலவச சிற்றுந்து சேவை நாளை 11:00 மணி ஒரு நாள் மட்டும் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
unknown nodeமேலும், இதுவரை இரண்டு ஒரு நாள் போட்டி முடிந்த நிலையில், இந்திய அணி 1 போட்டிலும், ஆஸ்ரேலியா அணி 1 போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் எந்த அணி வெற்றிபெறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.