இனிமேல் தான் ஆட்டம் 'ஆரம்பம்'...முதல் விக்கெட்டை பதிவு செய்த சச்சின் மகன்...குவியும் வாழ்த்துக்கள்.!!

ஐபிஎல் போட்டிகளில் சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்துள்ளார்.

அர்ஜுன் டெண்டுல்கர்

unknown node

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இந்த சீசன் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த வாரம் 16-ஆம் தேதி கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடினார். இதன் மூலம் அவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார்.

முதல் விக்கெட்

அந்த போட்டியை தொடர்ந்து நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இரண்டு ஓவர்களுக்கும் மேலாக காத்திருந்த பிறகு, அர்ஜுன் டெண்டுல்கர் இறுதி ஓவரில் ஒரு விக்கெட் வீழ்த்தி ஐபிஎல் போட்டிகளில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்தார்.

unknown node

2.5 ஓவர்கள் பந்து வீசிய அவர் மொத்தமாக 18 ரன்கள் கொடுத்திருந்தார். 19-வது ஓவரின் 5-வது பந்தை அவர் வீசிய போது  புவனேஷ் குமார் தனத்தை விக்கெட்டை இழந்தார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.  இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்களில் முதல் விக்கெட்டை பதிவு செய்த அர்ஜுன் டெண்டுல்கர்க்கு ரசிகர்கள் மற்றும் பல கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சச்சின் வாழ்த்து

மகன் முதல் விக்கெட் எடுத்துள்ள நிலையில், டிவிட்டரில் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் ”

மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் ஒரு சிறப்பான ஆல்ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேமரூன் கிரீன் மட்டை மற்றும் பந்து இரண்டிலும் ஈர்க்கப்பட்டார். இஷான் & திலக்கின் பேட்டிங் சிறப்பாக உள்ளது.ஐபிஎல் போட்டி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகி வருகிறது. இறுதியாக ஒரு டெண்டுல்கருக்கு ஐபிஎல் விக்கெட் வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

unknown node

அர்ஜுன் டெண்டுல்கர் நெகிழ்ச்சி

unknown node

போட்டி முடிந்த பிறகு பேசிய அர்ஜுன் “இது ஒரு சிறந்த தருணம். 2008 முதல் நான் ஆதரிக்கும் அணிக்காக விளையாடுவது எப்போதுமே சிறப்பு வாய்ந்தது. மும்பை  மற்றும் இந்திய அணியின் கேப்டனிடம் இருந்து தொப்பியைப் பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என கூறியுள்ளார். மேலும் ரோஹித் சர்மா அவருக்கு தொப்பி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.