ஏபி டிவில்லியர்ஸை புகழ்ந்து தள்ளிய கவாஸ்கர்..!!

Former Indian cricketer Sunil Gavaskar has praised AB de Villiers as a genius.

அவர் ஒரு ஜீனியஸ் என்று ஏபி டிவில்லியர்ஸை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் புகழ்ந்து கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 22 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது, இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். அதன் படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தனர். இதில் ஏபி டிவில்லியர்ஸ் 42 பந்துகளில் 75* ரன்கள் எடுத்தார். அடுத்ததாக 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 170 ரன்கள் மட்டுமே எடுத்து, இதனால் பெங்களூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ஏபி டிவில்லியர்ஸை பலர் பாராட்டி வருகின்றார்கள், அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியது ” ஏபி டிவில்லியர்ஸ் இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடினர். அவர் ஒரு ஜீனியஸ். ஏபி டிவில்லியர்ஸ் இப்படி அதிரடியாக விளையாடுவது தான் அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள். 20 ஓவர்கள் போட்டியில்  ஏபி டிவில்லியர்ஸ் ஆட்டத்தை பார்க்க எங்கு வேணாலும் செல்லலாம். ஏபி டிவில்லியர்ஸ் அடிக்கும் சிக்ஸர்களை பார்த்தால் மகிழ்ச்சி கிடைக்கும். 20 ஓவர்கள் போட்டியில் ” என்றும் கூறிஉள்ளார்.