இன்ஸ்டாகிராமை கலக்கும் ஜோடி ! செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியலில் இடம்பிடித்து அசத்தல்

Kohli and Anushka Sharma are ranked 25th and 24th most influential on Instagram

இன்ஸ்டாகிராமில் அதிகம் செல்வாக்கு பட்டியலில் 12 வது இடத்தில் கோலியும், 25 வது இடத்தில் அனுஷ்கா ஷர்மாவும் இடம் பிடித்துள்ளனர்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இணையதளங்களில் பல சாதனைகளை படைத்தது வருகிறார். ஆம், சமீபத்தில் ட்வீட்டரில் கூட இந்திய அளவில் அதிகம் லைக் செய்யப்பட்ட புகைப்படம் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் என்று ட்வீட்டர் அறிவித்திருந்தது.

மேலும் அதுமட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களில் இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்பற்றுவோர்களின் எண்ணிக்கையை கொண்ட ஒரே கிரிக்கெட் வீரர் விராட்கோலி தான். ரன்கள் அடித்து மட்டும் சாதனைகள் படைக்காமல் பலவற்றில் விராட் கோலி சாதனை படைத்தது வருவது அவரது ரசிகர்களளை உற்சாக படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியலை உலகளாவிய தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு தளமான (Hype Auditor) இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ உல் உள்ளார். 25 வது இடத்தில் நடிகை மற்றும் விராட்கோலியின் மனைவியான அனுஷ்கா ஷர்மா உள்ளார். அதைபோல் விராட் கோலி 12வது இடத்தில் உள்ளார்.