குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத் வெற்றி
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இப்போட்டியில் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் சாம் கரனின் பந்து வீச்சில் ஒரு வெற்றிகரமான பவுண்டரியை அடித்து தனது அணியை வெற்றிப்பாதைக்கு ராகுல் தெவாத்தியா அழைத்து சென்றார்.
ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
இந்நிலையில், இதனையடுத்து, இந்த போட்டியில் குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஐபிஎல் நிர்வாகம் ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், அவர் தலைமையிலான குஜராத் அணி ஓவர் தாமதமாக வீசியதால், அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் விதிகளின் படி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவிடும் அப்படி நேற்று குஜராத் அணி பந்து வீசி முடிக்காத காரணத்தால் ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதம் இது அவரின் ஹர்திக் பாண்டியாவின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு சஞ்சு சாம்சன்
இதைப்போல, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் குறைந்தபட்ச ஓவர் ரேட் குற்றங்கள் தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின் கீழ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.