இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஓய்வு குறித்து ஹர்பஜன் சிங் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக நேற்று முன்தினம் தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தெரிவித்தார். அவரை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார் மேலும் அவர் ஓய்வு பெரும் செய்தி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது என்று கூறலாம்.
மேலும் எல்லா நேரத்திலும் மிகச் சிறந்த ஒரு கிரிக்கே வீரராகவும் இந்தியாவுக்காக விளையாடிய மிகச் சிறந்த பேட்ஸ்மேனாகவும் இருக்கும் சுரேஷ் ரெய்னா ஓய்வு பெற்றலாலும் அவர் செய்த சாதனைகள் அணைத்து அழிக்கமுடியாத ஒன்றாக தான் இருக்கும் என்பதை எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.
இந்நிலையில் சுரேஷ் ரெய்னா ஓய்வு குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியது ரெய்னா ஓய்வு குறித்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது மேலும் இந்திய அணிக்கு இன்னும் நீங்கள் நிறைய அளிக்கலாம் என்றே நினைக்கிறேன். அதற்கான வயது, உடற்தகுதி உங்களிடம் உள்ளது என்று நான் நினைக்கிறன் என்று பதிவு செய்துள்ளார்.
unknown node