மை லெஜெண்ட் இந்த ஜெண்டில் மேன் தான்...!ஹார்திக்கின் ஹாட் _டச்...!

இந்தியாவில் ஐபிஎல் திருவிழா  தற்போது நடைபெற்று வருகிறது.இதில் மும்பை அணியில் விளையாடி வருபவர்  ஹர்த்திக் பாண்டியா.சர்ச்சைக்கும் ஷாட் மழைக்கும் சொந்தக்காரர்

இந்தியாவில் ஐபிஎல் திருவிழா  தற்போது நடைபெற்று வருகிறது.இதில் மும்பை அணியில் விளையாடி வருபவர்  ஹர்த்திக் பாண்டியா.சர்ச்சைக்கும் ஷாட் மழைக்கும் சொந்தக்காரர் .ஆமாங்க இந்தாண்டு ஐபிஎல் திருவிழாவில் அதிக வானவேடிக்கை காட்டியவர்.சிக்சர் மழையை மைதானத்தில் பொழிந்து ரன்னை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியவர்.இறுதிப்போட்டிக்கு  மும்பை தகுதிப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

unknown node

இந்த ஐ.பி.எல் தொடரில் 15 போட்டிகளில் விளையாடிய அவர் 393 ரன்களை  குவித்தார். இதற்கிடையில்  14 விக்கெட்டையும் வீழ்த்தி 29 சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை பரவசப்படுத்தினார் .இந்நிலையில்தான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்“எனது முன்னுதாரணம்- எனது நண்பன்-எனது சகோதரர்- எனது லெஜெண்ட் எல்லாமே எம்.எஸ்தோனி தான்என்று கூறியுள்ளார்.

unknown node

MS என்றாலே எட்டும் தூரம் வரையிலும் ஒரே குரலாக தான் இருக்கும் அது தோனி….தோனி….தான் ,மைதானத்தில்  தோனி உள்ளே நுழைந்ததும் வானத்தை பிளக்கும் கரகோஷத்திற்கு அளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

unknown node

அப்படி  எல்லா வயது உடையவர்களையும் ரசிகர்களாக கொண்ட கேப்டனாக வலம் வருபவர் தனது ரசிகர்களோடு ஓடி பிடித்து விளையாடுபவர்.

unknown node

இந்நிலையில் தான் இவரது ட்விட் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

unknown node