ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள மனீஷ் பாண்டேவை பலவிதமாக ரோஹித் சர்மா படம் எடுக்கும் சுவாரஸ்யமான வீடியோ ஒன்று சமூக வெளியாகியுள்ளது.
unknown nodeஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி20 மற்றும் 4 டெஸ்ட் உட்பட 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று பிரிஸ்மேன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில், டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்து ஆஸ்தெரேலிய அணி வெற்றி பெற்றது.
unknown nodeஇந்திய அணி போட்டியில் தோல்வி சந்தித்து அடுத்த போட்டிக்கு தயாராகி வரும் நிலையில் இந்திய அணியின் அதிரடி மன்னன் ‘ஹிட்மேன்’ என்றழைப்படும் ரோஹித் தொழில்முறை கேமிராமேனாகவே மாறிய நிகழ்வும் அரங்கேறியுள்ளது.இந்த சுவரஸ்சியமான நிகழ்வு விளம்பரம் ஒன்றிற்காக இந்திய வீரர் மனீஷ் பாண்டேவுக்கு போட்டோ ஷூட் ஒன்று நடந்துள்ளது.
unknown nodeஇந்நிலையில் அங்கு வந்த ரோஹித் மொபைலில் மனீஷ் பாண்டேவை பல விதமாக வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து உள்ளார்.இவர் எடுத்த இந்த வீடியோவை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதை பார்க்கும் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
unknown nodeDINASUVADU