,

உலகக்கோப்பை வெல்வதற்கு காரணம் நான் இல்லை …! ரகசியத்தை உடைத்த கவுதம் கம்பிர்?

By

கவுதம் கம்பிர் : இந்தியா அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட் இருந்து வருகிறார். அவரது பதவி காலம் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த டி20 உலகக்கோப்பையுடன் நிறைவு பெற்றுவிடும். மேலும், அவர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில் அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐயின் தேடல் இருந்தது.

இதனால், சில நிபந்தனைகளுடன் யார் வேண்டுமானாலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது.  இதற்கு பல கிரிக்கெட் ஜாம்பவான்களின் பெயர்கள் விண்ணப்பித்துள்ளதாக அடிப்பட்டது. அதிலும் முன்னாள் இந்திய கிரிக்கெட்டரான கவுதம் கம்பிருடன் பேச்சு வார்த்தை நடத்தி, இறுதி ஒப்பந்தம் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிசிசிஐ விரைவில் வெளியிடுவார்கள் என பல தகவல்கள் வெளியானது.

இது குறித்து கடந்த சில நாட்கள் கவுதம் கம்பிர் மௌனமாகவே இருந்தார், நேற்று அபுதாபியில் உள்ள மீடியோர் மருத்துவமனையில் இளம் விளையாட்டு வீரர்களுடன் ஒரு உரையாடலில் அவர் பேசிய போது, அங்கு ஒரு மாணவர் கேட்ட கேள்விக்கு பயிற்சியாளரின் விருப்பத்தை பற்றி மறைமுகமாக கம்பிர் பதிலளித்திருந்தார்.

அந்த மாணவர், “நீங்கள் இந்திய அணிக்கு பயிற்சியளிக்க விரும்பினால், உங்கள் அனுபவத்தால் எப்படி இந்திய அணியை உலகக்கோப்பையை வெற்றி பெற வைப்பீர்கள்?” என்று கேட்டார். அதற்கு கம்பிர்,”நான் இந்திய அணிக்கு பயிற்சியாளராக மிகவும் விரும்புகிறேன். நமது தேசிய அணிக்கு பயிற்சியளிப்பதை விட பெரிய மரியாதை எதுவும் இல்லை.

மேலும், உலகெங்கிலும் உள்ள 140 கோடி இந்தியர்களை அங்கீகாரம் செய்கிறோம், ​​அதைவிட பெரிய மரியாதை எப்படி இருக்க முடியும்? இந்தியா உலகக் கோப்பையை வெல்ல உதவுவது நான் இல்லை, உலகெங்கிலும் உள்ள 140 கோடி இந்தியர்கள் தான்.

அவர்கள் தான் இந்தியா உலகக் கோப்பையை வெல்ல உதவுவார்கள். எல்லோரும் நமக்காக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தால் நாங்கள் விளையாடி அவர்களை அங்கீகாரப்படுத்துவோம். மேலும், இந்தியா உலகக்கோப்பையை கட்டாயமாக வெல்லும்.

அதற்கு மிக முக்கியமான விஷயம் வீரர்கள் பயமின்றி இருக்க வேண்டும்”, என்று அவர் பதிலளித்திருந்தார். இவர் கூறியதன் அடிப்படையில் அடுத்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இவர் தான் என்ற ரகசியத்தை மறைமுகமாக சொல்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Dinasuvadu Media @2023