டெல்லி :இந்தியாவில் செப்டம்பர் மாதம் தொடங்கும் 50 ஓவர் உலக கோப்பை தொடருக்கு ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில், ஷெபாலி வர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் உள்ளனர்.
இந்த ஆண்டு பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையின் தலைமையில் நடத்தப்படும். இந்த உலகளாவிய போட்டி செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி நவம்பர் 2 ஆம் தேதி நடைபெறும். இதன் போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையின் ஐந்து நகரங்களில் நடைபெறும்.
அக்டோபர் 5ம் தேதி கொழும்பு நகரில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.செப். 30ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா, இலங்கையுடன் மோதுகிறது. இந்த உலகக் கோப்பையை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்துகின்றன, இதில் இந்தியா முதன்மை புரவலராக உள்ளது. பாகிஸ்தான் அணியின் போட்டிகள் இலங்கையின் கொழும்பில் நடைபெறும்.
இந்திய அணியில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான அணியில் ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ஜெமிமா, ரேணுகா சிங், அருந்ததி ரெட்டி, ராதா யாதவ்,யாஸ்திகா இடம் பெற்றுள்ளனர். ஆனால், முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பூஜா வஸ்த்ராக்கர், தொடக்க வீராங்கனை சபாலி வர்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை, இது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்த அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2-1 என வெற்றிபெற்று, இலங்கையில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரையும் கைப்பற்றிய வலுவான பார்மில் உள்ளது. 2017-ல் இங்கிலாந்துக்கு எதிராக இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த பின்னர். இந்த அணி தனது முதல் உலகக் கோப்பை பட்டத்தை வீட்டு மண்ணில் வெல்லும் முனைப்பில் உள்ளது.
ஸ்மிருதி மந்தனா (VC), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, ஜெமிமா ராட்ரிக்ஸ், ரேணுகா சிங், அருந்ததி ரெட்டி, ரிச்சா கோஷ், கிராந்தி கௌட், அமன்ஜோத் கவுர், ராதா யாதவ், ஸ்ரீ சரணி, யஷ்திகா பாட்டியா, ஸ்நே ராணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
