#INDvENG: சதத்தை நழுவிய தவான்.. 200 ரன்களை கடந்த இந்தியா!

Shikhar Dhawan, India's opening batsman, scored a century as the ODI between India and England is currently being played in Pune.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தற்பொழுது புனேவில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சதத்தை நழுவினார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட் மற்றும் டி-20 தொடரை கைப்பற்றியது. அதனைதொடர்ந்து மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர், இன்று முதல் 28 ஆம் தேதி வரை புனேவில் நடைபெறவுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா – ஷிகர் தவான் களமிறங்கியுள்ளார்கள். 28 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா வெளியேறியதை தொடர்ந்து, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த போட்டியில் சதம் அடித்தால் அதிக சதம் அடித்த கேப்டன் என்ற சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அவரையடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களில் வெளியேற, மத்தியில் ஆடிவந்த தவான் சிறப்பாக ஆடி, சதம் விளாசி அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 106 பந்துகளுக்கு 98 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். மத்தியில் இருந்த கே.எல்.ராகுல் 7 ரன்கள் எடுத்துள்ளார். தற்பொழுது இந்திய அணி, 40 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது.