இலங்கையை அடித்து தூக்கிய இந்தியா.! 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.!

இந்தியா - இலங்கை இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்தியா – இலங்கை இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித், இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும் அதிரடியாக விளையாடினர்.

unknown node

சிறப்பாக விளையாடிய ரோஹித் 44 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 56 பந்தில் 89 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

unknown node

பின்னர் களத்தில் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர்  சிறப்பாக விளையாடிய 25 பந்தில் அரைசதம் விளாசி 57* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.  இறுதியாக இந்திய அணி 20 ஓவரில்  2 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்தனர். 200 ரன்கள் இலக்குடன் இலங்கை களமிறங்கியது.

200 ரன்கள் என்கிற டி20 இமாலய இலக்கை எட்டமுடியாமலும், நமது இந்திய பவுலர்களின் சூழல் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமலும் இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற வண்ணம் இருந்தனர்.

unknown node

தொடக்க ஆட்டக்காரரான பாதும் நிஷன்கா டக்அவுட்டாகி வெளியேறினார். கமில் மிஸ்ரா 13, ஜனித் 11, தினேஷ் சண்டிமால் 10 என தொடர்ந்து வெளியேறினார், கேப்டன் தசன் ஷனகா 3 ரன்னில் வெளியேற, சாமிகா 21ரன்னில் வெளியேறினார். சாரித் அசாலன்கா மட்டும் 53 ரன்களுடனும், துஷ்மந்தா 24 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் நின்றனர்.

இறுதியில், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து இலங்கை அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி முதல் டி20 போட்டியை 62 என்கிற பெரிய வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.