இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் எடுத்து தோல்வி
78 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி தொடரையும் கைப்பற்றியது.
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று புனேவில் நடைபெற்றது. இரு அணிகள் இடையிலான முதல் போட்டியின் போது மழை குறுக்கிட்ட காரணத்தால் அப்போட்டி கைவிடப்பட்டது.இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று. 1-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகித்த நிலையில் தொடரை கைப்பற்றும் நோக்கத்தில் இந்தியாவும்-சமன் செய்யும் நோக்கில் இலங்கையும் இன்று களமிரங்கியது.இதில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனால் இந்திய அணி பேட்டிங்க் செய்ய களமிரங்கியது.இந்திய அணிக்கு ராகுல்-தவான் ஜோடி சிறப்பான ஒரு துவக்கம் கொடுத்தது.இலங்கை அனியின் பந்து வீச்சை எளிதாக சமாளித்த இவர்கள் இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். அதன் பின் சந்தகன் சுழலில் சிக்கிய தவான் (52) ஆட்டமிழக்கவே ராகுல் 54 ரன்கள் எடுத்தார்.
unknown nodeஅடுத்து களமிரங்கிய சாம்சன் (6 ),ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் (4) ரன்களிலும் ஆவுட் ஆகிய நிலையில் கேப்டன் கோலி (26) ரன்னில் அவுட்டானார். அதன் பின் களமிரங்கிய வாஷிங்டன் சுந்தர் டக் அவுட்டாகி அதிர்ச்சி தந்த நிலையில் கடைசி கட்டத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி காட்டி விளாசவே கிடுகிடுவென ரன்கள் உயர்ந்து 202 ரன் களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
unknown nodeஇதன்பின் களமிரங்கிய இலங்கை அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கத்திலே ஆட்டவீரர்களை இழந்து தடுமாறியது.
unknown nodeஇந்நிலையில் 123 ரன்கள் எடுத்து இருந்த இலங்கையை 15.5 ஓவர்களில் சுருட்டிய இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.பந்து வீச்சில் பும்ரா மற்றும் சைனி, ஷர்துல் தாகூர் ஆகியோரின் பந்துகளில் இலங்கையை சுருட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் இந்தியா 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.