பிரபல டிவி தொகுப்பாளினியை மணந்த இந்திய கிரிக்கெட்  வீரர் பும்ரா.!அழகிய திருமண புகைப்படங்கள்.!

Indian cricketer bumrah is married to TV presenter Sanjana Ganesan.

இந்திய நட்சத்திர வீரரான பும்ரா டிவி தொகுப்பாளினியான சஞ்சனா கணேசனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக தனக்கு விடுப்பு தர கோரி பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்திருந்தார்.அதன் பின் இவரது விடுப்புக்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது

இந்த நிலையில் பும்ரா விடுப்பு கேட்ட அதே நேரத்தில் அனுபமா பரமேஸ்வரன் தனக்கு விடுமுறை என்று ஷேர் செய்த பகிர்வு வைரலாகி இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், திருமணத்திற்காக தான் பும்ரா விடுப்பு கேட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது .ஆனால் அதற்கு நடிகை அனுபமா பரமேஸ்வரனின் தாயார் இந்த தகவல் அனைத்தும் வதந்தி என்று கூறி முற்றுப் புள்ளி வைத்தார் .

இந்த நிலையில் தற்போது பும்ரா தொலைக்காட்சி தொகுப்பாளினியான சஞ்சனா கணேசனை இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.சஞ்சனா கணேசன் பிரபல ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியான ஸ்டார் ஸ்போர்ட்ஸில் தொகுப்பாளினியாக உள்ளார். அதற்கு முன் ஐபிஎல் போட்டிகளையும், ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியதுடன் மிஸ் – இந்தியா போட்டியில் இறுதி சுற்று வரை சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.அதனு பிரபல பொழுதுபோக்கு தொலைக்காட்சியான எம்-டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சியான ஸ்பிலிட்ஸ் வில்லாவின் ஏழாவது சீசனில் பங்கேற்று பிரபலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.தற்போது இவர் கிரிக்கெட் வீரர் பும்ராவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.இந்த அழகிய திருமண ஜோடியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

unknown node