இந்திய கிரிக்கெட் அணியில் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தியின் தாயார், கொரோனா பரவல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 2.50 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், 1,95,213 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா கிரிக்கெட் அணியில் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தியின் தாயாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவரின் தாயார் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து வேதாவின் ட்விட்டர் பக்கத்தில், “எனது தாயாரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். என் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. எனது சகோதரிக்காக பிராத்தனை செய்யுள்கள். எனக்கு கொரோனா தொற்று இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
unknown node