வங்கதேச கிரிக்கெட் போட்டியில் சர்ச்சை.! இந்திய மகளிர் அணி கேப்டன் சஸ்பெண்ட்.! 

வங்கதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நடந்துகொண்ட விதம் தொடர்பாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Indian womens Cricket team captain Harmanpreet Kaur

வங்கதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நடந்துகொண்ட விதம் தொடர்பாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அண்மையில் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. அப்போது 1-1 என்ற கணக்கில் இருந்த போது தொடரின் முடிவை அறியும் இறுதி போட்டியில் இந்திய அணி விளையாடுகையில் ஆட்டம் டிரா என அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் களத்தில் ஆடும் போது எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். இந்த எல்பிடபிள்யு அவுட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தனது பேட்டால் ஸ்டம்பை தட்டி விட்டு சென்றார். மேலும், ஆட்ட நேர முடிவுக்கு நேரம் இருந்தும் சூப்பர் ஓவர் வைக்காமல் நடுவர்கள் போட்டியை டிரா என அறிவித்ததற்கும்  ஹர்மன்ப்ரீத் கவுர் அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், போட்டி இறுதியில் கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்ட போது, இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், வங்கதேச கேப்டன் நிகர் சுல்தானிடம், ‘ ஏன் நீங்கள் மட்டும் நிற்கிறீர்கள், உங்கள் நடுவர்களையும் அழையுங்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் தான் இந்த போட்டியின் வெற்றியாளர்கள் என்பது போல பேசியிருந்தார் என கூறப்படுகிறது.

இந்த சம்பவங்களை கொண்டு, இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நடந்து கொண்ட விதத்திற்காக அவர் அடுத்த 2 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட தடை விதித்தும், அந்த போட்டியின் சம்பளத்தில் 75 சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.