ஸ்மித்தை (98) கிளின் போல்டாக்கி...வழியனுப்பிய குல்தீப்....தன் சதத்தை பதிவு செய்த அந்த சூப்பர் விக்கெட்..!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.முதல் ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தோற்றதால்

ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தை(98) ரன்னில் கிளின் போல்டாக்கி வெளியேற்றிய குல்தீப்

தனது 100வது விக்கெட்டாக ஸ்மித்தின் விக்கெட்டை எடுத்து சர்வதேச கிரிக்கெட் உலகில் அசத்தல்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.முதல் ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தோற்றதால் வீராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. காரணம் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டது.

unknown node

வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றி இந்திய அணிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இன்றைய போட்டியில் தன் முழு ஆட்டத்தை காட்ட ஆஸ்திரேலியாவும் களம் இறங்கிய நிலையில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்தது.

unknown node

இதனால் பேட்டிங்க் செய்ய களமிரங்கிற இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6  விக்கெட் இழப்பிற்கு 340 ரன்களை குவித்தது.

unknown node

இதனால் 341 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆஸ்திரேலியா களமிரங்கி விளையாடி வந்த நிலையில் இந்திய அணியின் பந்து வீச்சுகளை சமாளிக்க முடியாமல்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  304 ரன் கள் மட்டுமே எடுத்தது இதனால் 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனால் இந்தியா. 1-1 என்று தொடரை சமன் செய்துள்ளது.

unknown node

போட்டி என்றால் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமில்லை ஒவ்வொரு விநாடியும் விளையாட்டின் போக்கு மாறிக்கொண்டு தான் வந்தது.இந்திய அணி தரப்பில்  சிறப்பாக பந்து வீசிய ஷமி தன் பங்கிற்கு 3 விக்கெடுகளை சாய்த்தார், சைனி, ஜடேஜா மற்றும் குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெடுகளை எடுத்து கொடுத்தனர்.

unknown node

இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்களின் ஃபில்டிங்க் பாரட்டுக்குரியதாகவே இருந்தது.அதிலும் இன்று மணிஷ் பாண்டேவின் வார்னர் கேட்ச் ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டது.முகமது ஷமி வீசிய பந்தை வார்னர் அடிக்கவே பந்து பறந்து மணிஷ் பாண்டே பக்கம் சென்றது. எல்லோரும் அது 4 ரன் கள் என்று எண்ணி கண் சிமிட்டும் நேரத்தில் பறந்து பாய்ந்து ஒரு கையாலே மணிஷ் பந்தை மடக்கி பிடித்து விட்டார்.மறுபக்கம் பேட்டை சுழற்றிய வார்னரே  ஒரு நிமிடம் ஷாக் ஆகி ஆட்டத்தை கணிக்க தவறிவிட்டார்.அத்தகைய வேகமான கேட்ச் பிடித்தார் அவரை இந்திய வீரர்கள் கொண்டாடினர்.

unknown node

மணிஷ் பாண்டே பில்டிங்கில் ஆட்டாகசம் என்றால் பவுலிங்கில் குல்தீப் அசுர வீச்சு ஆம் நேற்றைய ஆட்டத்தின் 38-வது ஓவரில் குல்தீப் வீசிய பந்தில் ஸ்மித் (98)அவுட் ஆனார்.

unknown node

சதம் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித்தின் திடீர் அவுட் மற்றும் சதம் அடிக்க 2 ரன் தேவைப்பட்ட நிலையில் ஸ்டெம்பை தெறிக்கவிட்டு போல்டாக்கி அனுப்பினார் இந்திய வீரர் குல்தீப்.

unknown node

இந்த விக்கெட் அவருக்கும்,அணிக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த விக்கெட்டாக பார்க்கப்படுகிறது அணியை வெற்றியை நோக்கி அழைத்து செல்ல தவறிய மற்றும் தன் சதத்தை தவறவிட்ட வருத்தத்தில் ஸ்மித் மட்டையை மைதானத்தில் அடித்து சற்று கோபத்தை வெளிப்படுத்தியவாறு வெளியேறுகிறார்.

unknown node

கனகச்சிதமான நேரத்தில் மிகவும்சிறப்பான விக்கெட் எடுத்த குல்தீப்பை அணியினர் கொண்டாடினர். இந்திய வீரர் குல்தீப் தனது 100 வது விக்கெட்டாகா ஸ்மித்தின் விக்கெட்டை எடுத்தார் இதன்  மூலம் தனது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 100 வது விக்கெட்டை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node

வார்னர் மற்றும் ஸ்மித்தின் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தவிடாமல் இந்திய அணி வீரர்கள் சமர்த்தியமான ஆட்டத்தைக் 2 வது ஒருநாள் காண்பித்தது.