INDvENG : புரட்டி எடுத்த சுப்மன் கில்..இங்கிலாந்துக்கு இந்தியா வைத்த பெரிய இலக்கு!
இங்கிலாந்துக்கு எதிராக 3-வது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 356 ரன்கள் குவித்துள்ளது.

அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தேர்வு செய்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 1 ரன்கள் ஆட்டமிழந்து வெளியேறினார். கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்த முறை சொதப்பலான ரன்னுடன் வெளியேறிய காரணத்தால் ரசிகர்கள் கவலையில் இருந்தனர். அந்த கவலையை போக்கும் விதமாக அவருடன் களமிறங்கிய சுப்மன் கில் அதிரடியாக விளையாடினார்.
அவரும் விராட்கோலியும் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் உருவாக்கி அணியை நல்ல ரன்ரேட்டுக்கு கொண்டு வந்தனர். பிறகு இருவரும் அரை சதம் விளாசினார்கள். அரைசதம் விளாசி கொஞ்ச நேரம் கூட ஆகவில்லை அதற்குள் விராட் கோலி 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் வெளியேறிய பிறகு களத்திற்குள் வந்த ஷ்ரேயாஸ் ஐயர் கில்லுடன் வலுவான ஒரு பார்ட்னர் ஷிப்பை உருவாக்கினார்.
ஒரு பக்கம் கில்லும் மற்றோரு பக்கம் ஷ்ரேயாஸ் ஐயரும் சேர்ந்து அதிரடியாக விளையாடினார்கள். கில் சதம் விளாச…ஷ்ரேயாஸ் ஐயரும் அரை சதம் விளாச எதிரணி மிரண்டனர். பிறகு ஒரு கட்டத்தில் கில் 112 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன்பிறகு, ஹர்திக் பாண்டியா 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். விக்கெட் தொடர்ச்சியாக விழுந்தாலும் களத்தில் நின்றுகொண்டு நிதானமாக விளையாடிய கே.எல் ராகுல் நல்ல டார்கெட் வைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு விளையாடி கொண்டு இருந்தார். பிறகு அவரும் 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு வந்த வீரர்களும் வேகமாக விக்கெட்களை இழக்க இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்து. அடுத்ததாக, 357 இத்தனை ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது. மேலும், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக அடில் ரஷித் 4 விக்கெட்களையும், மார்க் உட் 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.