#INDvsENG : அஸ்வின் – குலதீப் அசத்தல் ..! இந்தியா அணிக்கு 192 ரன்கள் இலக்கு ..!
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 23 -ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இதனால் இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு களமிறங்கிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 353 ரன்கள் எடுத்தது.
Read More :- மாரடைப்பால் உயிரிழந்த இளம் கிரிக்கெட் வீரர்..!
அதில் இந்தியா அணியின் துருவ் ஜுரேல் சிறப்பாக விளையாடி 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக சோயப் பஷீர் 5 விக்கெட்டுகள் எடுத்தார். இதனால், முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா அணி 46 ரன்கள் பின்தங்கி இருந்தது. அதை தொடர்ந்து 4-வது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்றைய நாளில் தங்களது இரண்டாவது இன்னிங்ஸிக்கு பேட்டிங் செய்ய களமிறங்கியது இங்கிலாந்து அணி.
இந்திய அணியின் சுழற் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து அணி. இந்தியா அணியில் குலதீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 5 விக்கெட்டுகளும் எடுத்து இங்கிலாந்து அணியை திணறடித்தனர். இதன் மூலம் இந்திய அணி இங்கிலாந்து அணியின் அனைத்து விக்கெட்டையும் எடுத்து வெறும் 145 ரன்களுக்கு சுருட்டியது. இதனால் இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கபட்டது.
Read More :- காயத்தால் தடுமாறும் சென்னை வீரர்கள்.. சோகத்தில் ரசிகர்கள்..!
மிகச்சிறிய இலக்கை நோக்கி தங்களது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட களமிறங்கியது இந்திய அணி. 4-வது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்றைய நாளின் முடிவில் இந்திய அணி விக்கெட் எதுவும் இழக்காமல் 8 ஓவருக்கு 40 ரன்கள் எடுத்துள்ளனர். இந்திய அணி இந்த போட்டியை வெற்றி பெற இன்னும் 152 ரன்கள் தேவைப்படுகிறது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் 27 பந்துகளில் 24 ரன்களும், ஜெய்ஸ்வால் 21 பந்துகளுக்கு 16 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.