#IPL Breaking: திணறிய கொல்கத்தா...மும்பை அணி அதிரடி பேட்டிங்...5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.!!

ஐபிஎல் தொடரின் இன்றைய MIvsKKR போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி  5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய MIvsKKR போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி  5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

MIvsKKR

unknown node

16-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு தேர்வு செய்தது.

185 ரன்கள் குவித்த கொல்கத்தா அணி

unknown node

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு  185 ரன்கள் குவித்தது. அதிகபட்சகமாக கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர் (100) ரன்கள்,  ஆண்ட்ரே ரஸ்ஸல்  (20) ரன்கள்  எடுத்தனர்.  அதைப்போல மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹிருத்திக் ஷோக்கீன்2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

186 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை

20 ஓவர்களில் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா (20ரன்கள்) , இஷான் கிஷன் (58ரன்கள்) என மும்பை அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்துவிட்டு தங்களது விக்கெட்களை இழந்தனர்.

unknown node

இவர்களை தொடர்ந்து சூர்யா குமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் நிதானமாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்கள். இருவரும் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து கொண்டிருந்த நிலையில், திலக் வர்மா (23ரன்கள்) 13-வது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

unknown node

அவரை தொடர்ந்து களமிறங்கிய டிம் டேவிட் அதிரடியாக சில சிக்ஸர்களை விளாசினார். அவர் ஒரு பக்கம் அதிரடியாக விளையாடி வந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் (43ரன்கள்) எடுத்து  ஆட்டமிழந்து வெளியேறினார்.  அவரை தொடர்ந்து களமிறங்கிய நேஹால் வதேரா (6 ரன்கள்) எடுத்து வெளியேறினார்.

unknown node

இறுதியாக 17.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது. அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷன் 58, சூர்யகுமார் யாதவ் 43 ரன்களும், திலக் வர்மா 30 ரன்களும், டிம் டேவிட் 24* ரன்களும், ரோஹித் சர்மா 20 ரன்களும் குவித்துள்ளனர். கொல்கத்தா அணியில் சுயேஷ் சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.