ஐபிஎல் ஓவர்…இன்று முதல் தொடங்குகிறது TNPL!
கோவை சுந்தர் காலேஜ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் TNPL போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகிறது.

கோவை : ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில், அடுத்ததாக 9-ஆவது தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் தொடர் கோவையில் இன்று (ஜூன் 05, 2025) தொடங்குகிறது. இன்று தொடங்கும் இந்த கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 6, வரை நடைபெறவுள்ளது.
இந்த மாபெரும் டி20 கிரிக்கெட் திருவிழாவில் 8 அணிகள் பங்கேற்கின்றன, மேலும் போட்டிகள் கோவை, சேலம், திண்டுக்கல், மற்றும் நெல்லை ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளன. இந்த தொடரின் முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் இன்று மோதவுள்ளன. எனவே, ரசிகர்கள் அனைவரும் போட்டியை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர்.
அது மட்டுமின்றி இந்த TNPL 2025 தொடர், ரவிச்சந்திரன் அஷ்வின், சாய் கிஷோர், விஜய் ஷங்கர், பாபா அபராஜித் போன்ற முன்னணி வீரர்கள் இருப்பதால் போட்டிகள் மீது ஆண்டுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கோவையில் இன்று தொடங்கும் இந்தத் தொடர், தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மாத கால மாபெரும் கிரிக்கெட் விருந்தாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
விளையாடும் அணிகள் மாற்றும் வீரர்கள் விவரம்
திண்டுக்கல் டிராகன்ஸ் (கேப்டன்: ரவிச்சந்திரன் அஷ்வின்)
வீரர்கள்: பாபா இந்திரஜித், சந்திரசேகர் டி.டி, தினேஷ் எச், ஹன்னி, ஜெயந்த் ஆர்.கே, கார்த்திக் சரண் எம், மான் கே.பாஃப்னா, பெரியசாமி ஜி, ராஜ்விந்தர் சிங், சந்தீப் வாரியர், ஷிவம் சிங், வருண் சி.வி, விஜு அருள் எம், விமல் குமார் ஆர், அடுல் மாருதி விட்கர்.
லைக்கா கோவை கிங்ஸ் (கேப்டன்: ஆர். சாய் கிஷோர்)
வீரர்கள்: சாய் சுதர்சன், ஷாருக் கான், எம். முகமது, உமேஷ் யாதவ், அவினாஷ் ஆர், மணிமாறன் சித்தார்த், வள்ளி அப்பா, ஜி. அஜிதேஷ், ஆர்.கே.ஆர். அனந்த், ஆர். ராம்குமார், சுஜய், எஸ். சுரேஷ் குமார், ஆர். கிரண் கவுஷிக், பி. விக்னேஷ், தனுஷ், அவினாஷ், ஆர்.எஸ். ஜகன், தமிழரசன், விவேக், முரளி.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன்: (பாபா அபராஜித்)
வீரர்கள்: விஜய் ஷங்கர் (18 லட்சத்தில் ஏலத்தில் எடுக்கப்பட்டவர்), அருணாசலம் வி, அய்யப்பன் பி, நாராயண் ஜெகதீசன், ஜிதேந்திர குமார் சி.எச், லோகேஷ் ராஜ் டி.டி, மதன்குமார் எஸ், பிரதோஷ் ரஞ்சன் பால், ராகுல் எஸ். ஷா, சிபி ஆர், சிலம்பரசன் எம், டாரில் எஸ். ஃபெராரியோ, பெரியசாமி ஜி, அஸ்வின் கிறிஸ்ட் ஏ, அபிஷேக் தன்வார், சதீஷ் ஆர், ஷாஜகான் எம், சூர்யா பி, சந்தோஷ் குமார் டி, ஆண்ட்ரே சித்தார்த் சி.
சேலம் ஸ்பார்டன்ஸ் (கேப்டன் : சி.ஹரி நிஷாந்த்)
வீரர்கள்: முகமது எம் (18.4 லட்சத்தில் ஏலத்தில் எடுக்கப்பட்டவர்), சி.ஹரி நிஷாந்த், என். சதுர்வேத், ஏ. கிருஷ்ணன், எஸ். லோகேஷ்வர், யு. சசிதேவ், எஸ்.எஸ். அபிசேக், எம். ஆயுஷ், ஏ. சேதன், எஸ். சிங், முருகன் அஷ்வின், பி. சரவணன், ஜி. சிங், ஆர். அலெக்ஸாண்டர், டி. ராகுல், வி.கே. மணிகண்டன், எல்.கே. ஆகாஷ்.
சீகெம் மதுரை பாந்தர்ஸ்
வீரர்கள்: வாஷிங்டன் சுந்தர், ஜெ. கவுஷிக், எஸ்.எஸ். கணேஷ், ஏ. கான், சி.ஹ. நிஷாந்த், என். சதுர்வேத், ஏ. கிருஷ்ணன், எஸ். லோகேஷ்வர், யு. சசிதேவ், எஸ்.எஸ். அபிசேக், எம். ஆயுஷ், ஏ. சேதன்.
நெல்லை ராயல் கிங்ஸ்
முக்கிய வீரர்கள்: ஜி. அஜிதேஷ், அருண் கார்த்திக், என்.எஸ். ஹரிஷ், ஆர். சோனு யாதவ், மோகித் ஹரிஹரன், வி.ஜே. சக்ரவர்த்தி, கே. ஈஸ்வரன், எஸ்.யு. முகிலன், எஸ்.ஜே. அருண்குமார், ஆர். சிலம்பரசன்.
திருச்சி வாரியர்ஸ்
வீரர்கள் : ஆர். ராஜ்குமார், கே. விக்னேஷ், ஜி. கோதாஷ் பன்னீர், ஆர். அனிருத் சேஷாத்ரி, பி. சரவண குமார், ஜி.எஸ். சாமுவேல், எஸ். ஷியாம் சுந்தர், கே. மணிகண்டன், ஏ.ஆர். முகுந்த்.
லேட்டஸ்ட் செய்திகள்
11 பேர் உயிரிழந்த விவகாரம்: ‘கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண்டாம்’ – உயர் நீதிமன்றம்!
June 6, 2025
அனைத்து விதமான கிரிக்கெட்டிற்கும் குட் பை சொன்ன பியூஷ் சாவ்லா.!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
June 6, 2025