ரன் மழை வெளுத்து வாங்கப்போவது உறுதி.! இன்று கொல்கத்தா – பெங்களூரு அணிகள் மோதல்.!

இந்த சீசன் ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டி இன்று கொல்கத்தாவில்  ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் -

இந்த சீசன் ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டி இன்று கொல்கத்தாவில்  ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகிறது. காயம் காரணமாக இந்த சீசன் ஐபிஎல் தொடரில் இருந்து கொல்கத்தா கேட்டன் ஸ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக ஆல் -ரவுண்டர் நிதிஷ் ராணா கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். ஸ்ரேயஸ் ஐயர், ஷகிப் அல் ஹசன் விலகியதை தொடர்ந்து ஜேசன் ராயை ரூ.2.8 கோடிக்கு கொல்கத்தா ஒப்பந்தம் செய்தது. எனவே இன்று பெங்களுர் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டி கடுமையாக இருக்கும் என தெரிகிறது.

ஏனெனில், இந்த சீசனில் கொல்கத்தா அணிக்கு இதுதான் முதல் போட்டி  எனவே முதல் போட்டியில் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்பில் அணியில் உள்ள வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.  கொல்கத்தா அணியை போல பெங்களூர் அணியும் வெற்றிபெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்திற்கு செல்லவேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது.

முதல் போட்டியில் மும்பையை வீழ்த்திய பெங்களூர் அணி ஐபிஎல் 2023 புள்ளி விவர பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. மேலும் இதற்கு முன்பு கொல்கத்தா அணியும் – பெங்களூர் அணியும் நேருக்கு நேர் 30 போட்டிகளில் மோதியுள்ளது. இதில் 16 முறை கொல்கத்தா அணியும், 14 முறை பெங்களூர் அணியும் வெற்றிபெறுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.