ஐபிஎல் 2023: இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகிறது. இதில் லக்னோ அணி இந்த சீசன் 3 போட்டிகள் விளையாடி சிறப்பாக 2 போட்டியில் வெற்றிபெற்று புள்ளி விவர பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
அதைப்போல, பெங்களூர் அணி 2 போட்டிகள் விளையாடி 1 போட்டியில் வெற்றிபெற்று புள்ளி விவர பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. இரண்டு அணிகளும் இன்று சம பலத்துடன் மோதுவதால் இன்று நடைபெறும் போட்டி கண்டிப்பாக மிகவும் கடுமையானதாக இருக்கும் என தெரிகிறது.
மேலும், இதுவரை ஐபிஎல் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் 2 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 2 ஆட்டங்களில் பெங்களூர் 2 போட்டியிலும் வெற்றியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.