700 நாட்கள் கடந்து களம் கண்ட இஷாந்த் சர்மா.! டெல்லிக்கு செய்த தரமான சம்பவம்.!

717 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இஷாந்த் சர்மா ஐபிஎல்-க்கு போட்டிகளில் களமிறங்கி நேற்று  2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

717 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இஷாந்த் சர்மா ஐபிஎல்-க்கு போட்டிகளில் களமிறங்கி நேற்று  2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஐபிஎல் 2023: டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில்கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்று  இந்த சீசனில்  டெல்லி அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் இஷாந்த் ஷர்மாவின் அசத்தலான பந்து வீச்சு என்று கூறலாம்.

unknown nodeunknown node

4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  போட்டி முடிந்தவுடன் பேசிய இஷாந்த் “நான் ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அணிக்காக ஒரு ஆட்டத்தை வெல்ல விரும்பினேன்” என தெரிவித்துள்ளார்.

unknown node

கடந்த சில ஆட்டத்தில் இஷாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவருக்கு கொஞ்சம் காய்ச்சல் இருந்ததால் அவரால் விளையாட முடியவில்லை. தற்போது உடல் நிலை சரியாகி மீண்டும் விளையாட வந்துவிட்டார். மேலும் வரை இந்த ஆண்டு நடந்த மினி ஏலத்தில் டெல்லி அவரை ரூ.50 லட்சத்துக்கு வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.