இலங்கையின் அதிரடி பேட்ஸ்மேன் இறந்துவிட்டார்..!இல்லப்பா இருக்கேன் பதறி பதில்..!

இலங்கை அணியின் முன்னாள் அதிரடி வீரர் சனத் ஜெயசூர்யா கார் விபத்து ஒன்றில் உயிர் இழந்து விட்டதாக தகவல்கள் பரவி வந்தது.இந்த தகவல் கிரிக்கெட் வட்டாரத்தில்

இலங்கை அணியின் முன்னாள் அதிரடி வீரர் சனத் ஜெயசூர்யா கார் விபத்து ஒன்றில் உயிர் இழந்து விட்டதாக தகவல்கள் பரவி வந்தது.இந்த தகவல் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிகமாக  பேசப்பட்டு வந்தது.மேலும் இதனை சிலர் உண்மை என கருதினார்.

unknown node

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திர அஸ்வின் இந்த செய்தியை கண்டு இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில்  இந்த செய்தி எனது வாட்ஸ் ஆப்பில் வந்தது.ஆனால் ட்விட்டர் போன்றவற்றில் இது போன்ற தகவலை நான் காணவில்லை இது உண்மையா  என்று கேட்டார்.அதற்கு இது பொய்யான தகவல் என்று  ஒருவர் தெரிவித்தார்.

https://twitter.com/ashwinravi99/status/1132861305281318915

இந்நிலையில் தலைக்கு மேல் தண்ணீர் போய் விட்ட கதையாய்  இந்த செய்தி காட்டு தீயாய் பரவி கடைசியில் சம்பந்தபட்டவர் கண்ணுக்கே சென்றது.ஆம் இந்த செய்தியை கேள்வி பட்ட ஜெய்சூர்யா  நான் கனாடாவில் கார் விபத்தில் இறந்ததாக வரும் செய்திகள் எல்லாம் பொய்யானது நான் உயிரோடு தான் இருக்கிறேன்.

unknown node

மேலும் நான் கனடா செல்லவில்லை இலங்கையில் தான் இருக்கிறேன் என்று கூறி தன்னை பற்றி வந்த வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.