பஞ்சாப் அணி 20 ஓவரில் 183 ரன்கள் எடுத்து 4 விக்கெட் இழந்து 2 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இன்று ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டி துபாய் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 185 ரன்களை எடுத்தனர்.
ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 49, லோமோர் 43 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் 5, முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 186 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர்.
இவர்கள் இருவரின் சிறப்பான ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி விக்கெட்டை பறிக்க தடுமாறியது. ஒரு புறம் மயங்க் அகர்வால் அடித்து விளையாட மறுபுறம் கே.எல் ராகுல் நிதானமாக விளையாடி வந்தார். அதிரடியாக விளையாடிய மயங்க் அகர்வால் அரைசதம் அடித்தார். இவர்கள் இருவரின் கூட்டணியில் 120 ரன்கள் சேர்ந்தது. கே.எல் ராகுல் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கார்த்திக் தியாகியிடம் 49 ரன்னில் கேட்சை கொடுத்து வெளியேறினார்.
அடுத்த சில நிமிடங்களில் 67 ரன்னில் பெவிலியன் திரும்ப அடுத்து இறங்கிய ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் அடித்து விளையாடினர். ஆனால், சிறப்பாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் கடைசி ஓவரில் 32 ரன்னில் விக்கெட்டை இழக்க அடுத்து இறங்கிய தீபக் ஹூடா வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுக்க இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவரில் 183 ரன்கள் எடுத்து 4 விக்கெட் இழந்து 2 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
கடைசி ஓவரை வீசிய கார்த்திக் தியாகி 1 ரன் கொடுத்து 2 விக்கெட்டை பறித்ததால் பஞ்சாப் அணி தோல்வியை தழுவியது. இப்போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றதன் மூலம் 8 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் இருந்து 5-வது இடத்த்திற்கு சென்றுள்ளது.
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…
சென்னை : விஷாலின் 35-வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்பொழுது, 'ரெட் பிளவர்' திரைப்பட நிகழ்வில் கலந்து…
சென்னை : தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை அனுமதியின்றி கொட்டுவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்காக, தமிழ்நாடு அரசு குண்டர் சட்டத்தின்…
சென்னை : ஆளுநர் மாளிகையில் கடந்த ஜூலை 13-ம் தேதி அன்று நடைபெற்ற மருத்துவர் தின நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர்…
மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''மாண்புமிகு பத்து தோல்வி பழனிசாமி அவர்களே, 2019ஆம் ஆண்டிலிருந்து…