தொழிற்முறை கிரிக்கெட் போட்டியில் இருந்து முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் ஓய்வு பெறுவதாக ட்விட்டர் மூலம் உறுதி செய்துள்ளார்.
பீட்டர்சன், தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறார். 37 வயதான பீட்டர்சனின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை சர்ச்சை காரணமாக 2014ம் ஆண்டே முடிவுக்கு வந்தது. 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பீட்டர்சன், 23 சதம், 35 அரைசதங்களுடன் 8181 ரன் குவித்துள்ளார். 136 ஒருநாள் போட்டிகளில் 9 சதம், 25 அரைசதத்துடன் 4440 ரன், 37 டி20 போட்டிகளில் 1176 ரன் அடித்துள்ளார்.
2005ம் ஆண்டு ஆஷஸ் தொடர், 2010 உலக டி20 டைட்டில், 2012-13 இந்தியாவுக்கு எதிராக தொடர்களை கைப்பற்றுவதற்கு முக்கிய புள்ளியாக இருந்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.