பிரதமர் மோடிக்கு விராட் கோலி வாழ்த்து..!

இந்திய அணி உலககோப்பை போட்டியில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. மேலும் உலகக்கோப்பை போட்டியானது வரும் 30 தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது.

இந்திய அணி உலககோப்பை போட்டியில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. மேலும் உலகக்கோப்பை போட்டியானது வரும் 30 தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்றது.இதில் பாஜக            தனிப் பெருன்பாண்மையுடன்  மீண்டும்  மோடி தலைமையில் ஆட்சி அமைக்க உள்ளது.தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு  பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்துகளை  தெரிவித்து வரும் நிலையில்   இந்திய அணி கேப்டன் விராட் கோலி ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை பிரதமர் மோடிக்கு தெரிவித்துள்ளார்.

அதில் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் ,உங்களுடைய தொலைநோக்கு பார்வையால் இந்தியா மிகப்பெரிய  உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.