இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் பல்வேறு பதவிக்கு தேர்வு இம்மாதம் நடைப்பெற உள்ளது.இந்த பதவிக்கான விண்ணப்பிக்கும் தேதி நேற்று முன்தினம் உடன் முடிவடைந்து உள்ளது.
unknown nodeதேர்வு செய்யும் குழுவில் கபில் தேவ் ,அன்ஷுமன் கெயிவாட் ,சாந்தா ரங்கசாமி உள்ளனர். இவர்கள் ஆகஸ்ட் 13,14 ஆகிய தேதிகளில் நேர்காணலில் நடைபெற உள்ளது. தலைமை பதவிக்கு டாம் மூடி , மைக் ஹெசன் ,ஜெயவர்த்தனே உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
அதேபோல் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங் , ஜிம்பாப்வே அணியின் தற்போதைய பயிற்சியாளருமான லால்சந்த் ஆகியோரும் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் தலைமை பொறுப்பாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி இருக்க வேண்டும் என விராட் கோலி ஆதரவு தெரிவித்துள்ளது.
unknown nodeஇந்நிலையில் தலைமை பயிற்சியாளர் பரிந்துரை செய்ய கோலிக்கு உரிமை உள்ளது. எனவும் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார். அவர்தான் கேப்டன் அதனால் தலைமை பயிற்சியாளர் யார் வரலாம் என்ற விருப்பத்தை தெரிவிக்கலாம் என கூறினார்.