LSG vs PBKS : தட்டுத்தடுமாறி டார்கெட் வைத்த லக்னோ! பஞ்சாப் ஜெயிக்க 172 ரன்கள் தேவை.!

லக்னோ அணி பஞ்சாப் அணிக்கு எதிராக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.

ipl 2025 - LSG vs PBKS

லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் ஜெயித்த பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இரு அணிகளும் இந்த சீசனில் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இரண்டாவது வெற்றியை ருசிக்க இரு அணிகளும் நேருக்கு நேர் களமிறங்கி உள்ளன. முதலில் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஸ் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். கேப்டன் ரிஷப் பண்ட்டும் 2 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.

ஐடன் மார்க்ரம் 28 ரன்களும்,  நிக்கோலஸ் பூரன் 44 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். டேவிட் மில்லர் 19 ரன்னில் வெளியேறினார். ஆயுஷ் படோனி மற்றும் அப்துல் சமத் நிலைத்து ஆடி அணியின் ஸ்கோரை கணிசமான அளவுக்கு உயர்த்தினர். ஆயுஷ் படோனி அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தும், அப்துல் சமத் 27 ரன்களும் எடுத்து 20வது ஓவரில் இருவரும் அவுட் ஆகினர்.

பஞ்சாப் அணி சார்பாக  அர்ஷ்தீப் சி 3 விக்கெட் வீழ்த்தினார். சாஹல், லாக்கி பெர்குசன், கிளென் மேக்ஸ்வெல், மார்கோ ஜான்சன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு லக்னோ அணி 171 ரன்கள் எடுத்துள்ளது. 20 ஓவரில் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai