சதம் விளாசிய மேத்யூஸ் ! இந்தியாவிற்கு 265 ரன்கள் இலக்காக வைத்த இலங்கை !

இன்றைய  முதல் போட்டியில் இந்திய அணியும் , இலங்கை அணியும் மோதி வருகிறது. இப்போட்டி   லீட்ஸில்  உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில்  டாஸ்

இன்றைய  முதல் போட்டியில் இந்திய அணியும் , இலங்கை அணியும் மோதி வருகிறது. இப்போட்டி   லீட்ஸில்  உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில்  டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக திமுத் கருணாரத்ன ,குசல் பெரேரா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து  இருவரும் நிதானமாக விளையாடி வந்தனர்.  நான்காவது ஓவரில் கேப்டன் திமுத் கருணாரத்ன 10 ரன்களுடன் வெளியேறினர்.பின்னர் அவிஷ்கா பெர்னாண்டோ களமிறங்கினர்.

unknown node

நிதானமாக விளையாடிய குசல் பெரேரா 18 ரன்னில் அவுட் ஆனார்.பின்னர் களமிறங்கிய குசால் மெண்டிஸ் 3 , அவிஷ்கா 20 ரன்களுடன் தங்களது  விக்கெட்டை பறிகொடுத்தனர். இலங்கை 12 ஓவரில்  4 விக்கெட்டை பறிகொடுத்து பரிதாப நிலையில் இருந்தது .அப்போது மத்தியில் இறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் ,  லஹிரு திரிமன்னே இருவரும் கூட்டணியில் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

unknown node

இதனால் அணியின் எண்ணிக்கை  உயர்ந்தது.இருவரின் அதிரடி ஆட்டத்தால் இருவருமே  அரைசதத்தை நிறைவு செய்தனர்.  ஏஞ்சலோ மேத்யூஸ் சிறப்பான ஆட்டத்தால் அரைசதம் அடித்த சில ஓவரில் தனது சதத்தையும் நிறைவு செய்தார். இப்போட்டியில் ஏஞ்சலோ மேத்யூஸ் 113 , லஹிரு திரிமன்னே 53 ரன்களுடன்  வெளியேறியனர்.

unknown node

இறுதியாக இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 264 ரன்கள் எடுத்தது. இந்திய அணி பந்து வீச்சில் பும்ரா 3 விக்கெட்டை பறித்தார்.265 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.