காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து பெங்களூரு வீரர் ரஜத் படிதார் விலகல்.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிக்கு மேலும் சோகமான செய்தி வெளியாகியுள்ளது. ஆம்… இந்த அணியின் பேட்டர் ரஜத் படிதார் காயம் காரணமாக நடப்பு சீசனில் இருந்து விலகி உள்ளார்.
இது குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது ட்விட்டர் பக்கத்தில், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரஜத் படிதார் IPL2023-ல் இருந்து வெளியேற்றப்பட்டார். ரஜத் விரைவில் குணமடைய விரும்புகிறோம், மேலும் அவருக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் என்று குறிப்பிட்டுள்ளது.
unknown nodeஐபிஎல் 2023 தொடங்கியதில் இருந்து ஆர்சிபி வீரர்கள் காயங்களால் வெளியேறி வருகின்றனர். ஏற்கனவே, ஹேசில்வுட், ரீஸ் டாப்லி, வில் ஜாக்ஸ் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் ரஜத் படிதாரை சேர்த்தால் இதுவரை மொத்தம் 4 பேர் ஆகிவிடும், இதனால் ஆர்சிபி ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
unknown nodeஇதற்கிடையில், மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக பந்து வீசி கொண்டிருந்த ரீஸ் டாப்லி, பீல்டிங் செய்யும் போது கீழே விழுந்தார். இதனால் அவரது தோள்பட்டையில் அடிபட்டது. இதனால், சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்ல வேண்டியதாயிற்று.