உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பந்துவீசி வருகிறது. ஆஸ்ரேலியா அணி பேட்டிங் செய்து வருகிறது. இதுவரை ஆஸ்ரேலியா 3 விக்கெட்கள் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், போட்டியில் நிதானமாக விளையாடி வந்த ஆஸ்ரேலிய வீரர் லபுஸ்சன் ஷமியின் அசத்தலான பந்து வீச்சில் போல்ட் ஆகி 26 ரன்களில் ஆட்டத்தை விட்டு வெளியேறினார். இதற்கு முன்பு லபுஸ்சன் இரண்டு முறை LBW -க்கு ரிவியூ செய்யப்பட்டது.
unknown nodeஆனால் இரண்டு முறையுமே அதிர்ஷடவசமாக தப்பித்து ஆட்டத்தை நீடித்தார். இறுதியாக ஷமி இரண்டு முறை மிஸ் ஆச்சு..இந்த முறை மிஸ் ஆகாது என்பது போல லபுஸ்சன்-ஐ போல்ட் செய்து அவரை ஆட்டமிழக்க செய்தார். மேலும் ஷமி 9 ஓவர்கள் பந்து வீசி 21 ரன்கள் கொடுத்துள்ளார். 1 விக்கெட் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node