மொயீன் அலிக்கு இன்னும் விசா கிடைக்கவில்லை என்பதால் ஐபிஎல் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 இன் முதல் போட்டியில் நான்கு முறை சாம்பியனான சென்னை மற்றும் கடந்த ஆண்டு ரன்னர்-அப் அணியான கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு வரும் சனிக்கிழமை வான்கடே மைதானத்தில் மோதுகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொயீன் அலி இல்லாமல் விளையாட உள்ளது. இதை சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதி செய்தார்.
மொயீன் அலி விளையாட முடியாது:
விசுவநாதன் கூறுகையில், மொயீன் அலி முதல் போட்டியில் விளையாட முடியாது என்பது உறுதி. அவருக்கு இன்னும் விசா கிடைக்கவில்லை. இதற்கான முயற்சிகளை நாங்களும் பிசிசிஐயும் (இந்திய கிரிக்கெட் வாரியம்) மேற்கொண்டு வருகிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். அவர் இன்னும் அணியில் சேராதது ஏமாற்றம் அளிக்கிறது. நாளை விசா கிடைத்தாலும், அவரால் முதல் போட்டியில் விளையாட முடியாது என்றார்.
தக்கவைக்கப்பட்ட மொயின் அலி:
மொயின் அலி ஐபிஎல் ஏலத்திற்கு முன்பே தக்கவைக்கப்பட்டது. சென்னை கோப்பையை வெல்ல மொயீன் அலி முக்கிய பங்கு வகித்தார். ஐபிஎல் 2021ல் சென்னை அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் 15 இன்னிங்ஸ்களில் 357 ரன்கள் எடுத்தார். மொயீன் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…