ICC : இவங்க தான்பா ..! 30-வயசுக்கு மேல அதிக சதம் அடிச்சவங்க ..!

ICC-highest Century age 30 [ file image]

ICC : ஐபிஎல், டி20 கிரிக்கெட் போட்டிகள் உருவெடுத்த பிறகு கிரிக்கெட் ரசிகர்கள் ODI கிரிக்கெட் போட்டிக்கும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கும் முக்கியத்துவம் தருவதை குறைத்து விட்டனர். ஆனால், கடந்த 5-6 வருடங்களாகேவே இந்த நிலை மாறி உள்ளது. அதிகமான இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டியிலும், ஓடிஐ போட்டியிலும் ஆதிக்கங்கள் செலுத்துவதால் கிரிக்கெட் ரசிகர்கள்  உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

Read More :- INDvsENG : அஸ்வினை புகழ்ந்த ஆஸ்திரேலிய லெஜெண்ட் ..! சொன்னதை செய்து காட்டிய அஸ்வின் ..!

இந்நிலையில், இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து கொண்டிருக்கும் 5-வது  டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மாவும், கில்லும் சதம் விளாசி ஆட்டமிழந்தனர். இதில் ரோஹித் சர்மா அணியின் மூத்த வீரராகவும், அணியின் கேப்டனாகவும் தனது பொறுப்பான ஆட்டத்தை இந்திய அணிக்காக செய்து உள்ளார்.

Read More :- IPL 2024 : ஐபிஎல் தொடருக்கு முற்று புள்ளி வைக்கும் தினேஷ் கார்த்திக் ..?

இதில் சிறப்பம்சம் என்னவென்றால் 30-வயதுக்கு மேல் சர்வதேசிய கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்களை அடித்த பட்டியலில் ரோஹித் சர்மா 4-வதாக இடம் பிடித்துள்ளார். அவர் அடித்த இந்த சத்தத்தின் மூலம், இந்த தொடரில் 2 முறையாகவும், டெஸ்ட் கேரியரில் 12-வது முறையாகவும், டெஸ்ட் உலகக்கோப்பையில் (WTC) -யில் இதோடு 9-வது முறையாகவும் பூர்த்தி செய்துள்ளார்.

30 வயதுக்கு மேல் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியல் :- 

  • 43  – குமார் சங்ககாரா           – இலங்கை
  • 36  – மேத்யூ ஹைடன்              – ஆஸ்திரேலியா
  • 36 – ரிக்கி பாண்டிங்                – ஆஸ்திரேலியா
  • 35 – ரோஹித் சர்மா*                – இந்தியா
  • 35  – சச்சின் டெண்டுல்கர்      – இந்தியா
  • 34 – தில்ஷன்                                 – இலங்கை

இந்த பட்டியலில் ரோஹித் ஷர்மாவை தவிர மற்ற வீரர்கள் எல்லாரும் ஓய்வை அறிவித்து விட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

RIP Ratan Tata
India whitewash Bangladesh
NZWvsSLW
Kavarapettai Train accident
Mohammad Shami
Chief pilot Ikrom Rifatli Fami Zainal - co-pilot Maitri Shithole
Rishabh Pant