ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி அதிரடியாக விளையாடி தொடரை 2-0 என கைப்பற்றியது.
அதனை தொடர்ந்து 3- வது போட்டி நேற்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், பாகிஸ்தான் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், சுழற்பந்து வீச்சாளரும், ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனுமான ரஷீத்கான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இமாலய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
unknown nodeஅது என்ன சாதனை என்றால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு பவுண்டரி, சிக்சர் கூட விட்டுக்கொடுக்காமல் தொடர்ச்சியாக 106 பந்துகள் வீசிய முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். அருமையாக பந்து வீசி பவுண்டரி தராமல் தொடர்ந்து 100 பந்துகள் வீசிய அவர் 101 -ஆவது பந்தில் பாகிஸ்தான் வீரர் அப்துல்லா ஷபீக் விக்கெட்டை எடுத்துள்ளார்.
unknown nodeபிறகு இறுதியாக ரஷீத்கான் வீசிய 107-ஆவது பந்தில் பாகிஸ்தான் வீரர் சயூம் அயூப் சிக்சர் விளாசியுள்ளார். ஆனாலும். 106 பந்துகள் வீசி ஒரு பவுண்டரி, சிக்சர் கூட கொடுக்காத முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.