இன்று என்ன நாள்... முதன் முறையாக குஜராத் IPL கோப்பையை வென்ற நாள்.! மீண்டும் அதே நிகழ்வு நிகழுமா.?

கடந்த ஆண்டு இதே நாளில் குஜராத் அணி தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது.

Gujarat Titans

கடந்த ஆண்டு இதே நாளில் குஜராத் அணி தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது.

ஐபிஎல் போட்டி நேற்று நிறைவடைந்து யார் வெற்றியாளர் என காண காத்திருந்த ரசிகர்களுக்கு மழை மிக பெரிய ஏமாற்றத்தை கொடுத்துவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் இறுதி போட்டி இன்று அதே குஜராத், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு தான் முதன் முதலாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகள் ஐபில்எல் களத்தில் உள்ளே நுழைந்தன. இதில் குஜராத் அணி ஐபிஎல் முதல் தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தியது. அதுவும் கடந்த 2022இல் இதே மே 29ஆம் தேதியில் தான்.

தற்போது மீண்டும் அதே நாளில் இன்று இறுதி போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது குஜராத். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கோப்பையை கைப்பற்றுமா.? அல்லது சென்னை 5வது முறையாக கோப்பையை கைப்பற்றுமா என்பதை இன்று மழை குறுக்கிடாமல் இருந்தால் களத்தில் தெரிந்துவிடும்.