ஒரே பந்தில் ஸ்டம்பை இரண்டாக உடைத்தெரிந்த பங்காளி..!!!மிரட்டும் விக்கெட்..!

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான பாகிஸ்தான்  அணியானது கேப்டவுன் டெஸ்டில் பாக்.., அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீரின் ஆக்ரோசமான பந்துவீச்சால் ஸ்டம்பானது

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான பாகிஸ்தான்  அணியானது கேப்டவுன் டெஸ்டில் பாக்.., அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீரின் ஆக்ரோசமான பந்துவீச்சால் ஸ்டம்பானது இரண்டாக உடைந்தது.

கேப் டவுனில் தென்னாப்ரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டியானது நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 177 ரன்களே சுருண்டது. பின் முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய தென்னாப்ரிக்க அணியானது டு பிளிசிஸ் (103) சதத்தால் ஆட்டத்தால் 431 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.

unknown node

தென்.., அணியை விட 254 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சை தொடங்கிய நிலையில் தொடக்க வீரர் ஷான் மசூத், ஆசாத் ஷஃபீக், பாபர் அஸாம் ஆகியோர் அரை சதம் அடித்த நிலையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். இதன் இறுதியில் பாகிஸ்தான் அணியால் 294 ரன்களுக்குள் ஆல்அவுட்டாகியது.இதனால் எதிரணியான தென்னாப்ரிக்கா வெற்றி பெற 41 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

unknown node

இதற்கு முன் 3ம் நாள் ஆட்டத்தில் தென்னாப்ரிக்கா முதல் இன்னிங்சில்  விளையாடிய போது 31வது ஓவரை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர் அசுர வேகத்தில் வீச அந்த ஓவரில் முதல் பந்தை அமீர் இன்ஸ்விங் செய்து வீச  எதிரணியிரான வெர்னன் பிளேண்டரின் பேட்டின் முனையில் பந்துபட்டு லெக் ஸ்டம்பை  இரண்டாக பதம் பார்த்தது. அத்துடன்  பந்து ஸ்டம்பில் மோதிய வேகத்தில் ஸ்டம்பு இரண்டாக உடைந்து போனது.உடைந்த ஸ்டம்பை  சக வீரர் அதனை ஒட்ட வைக்க முயற்சித்தனர். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்டம்பை உடைத்து எரிந்த 26 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளரான அமீர், டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பதற்கு முன்னதாக தான்  3 மாதங்களாக பந்துவீச்சு நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்துள்ளார். இந்நிலையில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node