இந்தாண்டுக்கான எமெர்ஜிங் ஆசிய கோப்பையை இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் ஏ அணி வென்றது.
2023க்கான ஆண்டுகான எமர்ஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வந்தது. இதில் இறுதி போட்டிக்கு பாகிஸ்தான் ஏ அணி மற்றும் இந்தியாவின் ஏ அணி ஆகியவை தேர்வாகியது.
நேற்று மதியம் 2 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கியது. இதில் முதலில் ஆடிய பாகிஸ்தான் ஏ அணி 50 ஒவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்து இருந்தது. அதிகபட்சமாக தயப் தஹிர் 108 ரன்கள் அடித்து இருந்தார்.
50 ஓவரில் 353 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா 61 ரன்களும் கேப்டன் யாஷ் 39 ரன்களும் எடுத்திருந்த நிலையில், மீதமுள்ள வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் 40 ஓவர் முடிவில் 224 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்து இருந்தது. பாகிஸ்தான் அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று எமர்ஜிங் ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
ஆட்டநாயகன் விருது தயப் தஹிருக்கு வழங்கப்பட்டது. அதேபோல் தொடர் நாயகன் விருது இந்திய அணி வீரர் நிஷாந்த் சிந்துவிற்கு வழங்கப்பட்டது.
