நடுவரை தரக்குறைவான வார்தையில் பேசிய பொல்லார்ட்...அபராதம் போட்ட ஐபிஎல் நிர்வாகம்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கீரான் பொல்லார்ட்க்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 15% அபராதமாக விதிப்பு.

Hero Image

டெல்லி : மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளரும், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர வீரருமான கீரான் பொல்லார்டுக்கு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) நடத்தை விதிகளை மீறியதாக 15 சதவீத போட்டிக் கட்டண அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது, நான்காவது நடுவரை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட கீரான் பொல்லார்டுக்கு ஐபிஎல் நடத்தை விதிகளின் லெவல்-1 பிரிவின் கீழ் அபராதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கீரான் பொல்லார்ட், இரண்டாவது இன்னிங்ஸின் 19ஆவது ஓவரின்போது நான்காவது நடுவரை நோக்கி அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இது ஐபிஎல் நடத்தை விதிகளின் 2.3 பிரிவை மீறிய செயலாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி முடிந்த பிறகு பொல்லார்ட் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, மேட்ச் ரெப்ரி பங்கஜ் தர்மானி விதித்த தண்டனையை ஏற்றுக்கொண்டார்.கடந்த காலங்களிலும் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக பொல்லார்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நீண்டகால பழக்கமுள்ள பொல்லார்ட், தற்போது அணியின் பேட்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார்.இந்த சம்பவம் ஐபிஎல் 2026 சீசனில் பயிற்சியாளர்கள் மற்றும் அணி அதிகாரிகளின் நடத்தை குறித்து மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.