இந்திய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் தென்னா பிரிக்கா பேட்டிங் செய்தது.முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தனர்.பின்னர் களமிறங்கிய இந்திய அணி 47.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 230 ரன்கள் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
unknown nodeஇந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா , ஷிகர் தவான்இருவரும் களமிறங்கினர்.அப்போது 3-வது ஓவரை தென் ஆப்ரிக்க அணியின் வேக பந்து வீச்சாளர் ரபாடா வீசினார்.அந்த ஓவரில் கடைசி பந்தை ரபாடா மணிக்கு 146 கி.மீ அசுர வேகத்தில் யார்க்கராக வீச அந்த பந்தை எதிர்கொண்ட ஷிகர் தவான் பேட்டை ரபாடா பந்து பதம் பார்த்தது.இதனால் ஷிகர் தவானின் பேட் நுனியில் சிறிய துண்டு உடைந்து தெறித்தது.பின்னர் ஷிகர் தவான் 8 ரன்கள் எடுத்து 6 ஓவரில் ரபாடாவிடம் விக்கெட்டை பறி கொடுத்தார்.