தோனியை போல ரன் அவுட் செய்த அதில் ரஷீத் !வைரலாகும் வீடியோ

Rashid out like Dhoni is the video of Rashid Diamond

இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடி வந்தது.இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் டோனி போல அதில் ரஷீத் ரன் அவுட் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

லீட்ஸ் உள்ள ஹெட்பிங்லே மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 351 ரன்கள் எடுத்தனர்.

பின்னர் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.27-வது ஓவரை அதில் ரஷீத் வீசினார். அப்போது அந்த பந்தை சந்தித்த  சர்ஃபரஸ் அகமது பந்தை அடித்தார். எதிரில் இருந்த பாபர் அஜாம் ரன் எடுக்க முயற்சி செய்த போது பந்தை பட்லர் பிடித்து அதில் ரஷீத்திடம் வீசினார்.

அதில் ரஷீத் அந்த பந்தை பிடித்து தோனியைப் போல ஸ்டெம்பை பார்க்காமல் ரன் அவுட் செய்தார்.இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த ஒருநாள்தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது என்பது குறிப்பிடதக்கது.

unknown node