எதிர்காலத்தில் ரிஷப் பண்ட் சிறந்த கேப்டனாக இருப்பார் – சுனில் காவஸ்கர்..!!

The former cricketer of the Indian team has said that Rishabh Pund will be the best captain in the future

எதிர்காலத்தில் ரிஷப் பண்ட் சிறந்த கேப்டனாக இருப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மிகவும் சிறப்பாக விளையாடி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த சீசன் ஐபிஎல் தொடரில் சுரேஷ் ஐயர் காயம் காரணமாக விளையாடவில்லை அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் கேப்டன்ஷி செய்தார்.

மேலும் தற்போது இதனை தொடர்ந்து ரிஷப் பண்ட் கேப்டன்ஷிப் குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியது ” ரிஷப் பண்ட் கேப்டன்ஷிப் மிகவும் அருமையாக இருக்கிறது வருகின்ற காலத்தில் அவர் செய்யும் சிறிய தவறுகளை திருத்திக்கொண்டு எதிர்காலத்தில் சிறந்த கேப்டனாக இருப்பார். ரிஷப் பண்ட் கேப்டன்ஷிப் சிறப்பாக இருந்ததால் தான் டெல்லி அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது “என்றும் கூறியுள்ளார்.