ரோஹித் ஒன்னும் கோலி போன்ற வீரர் அல்ல..கிளம்பிய பரபரப்பு வதந்தி...விளக்கம் கொடுத்த சென்னை வீரர்.!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த மும்பை அணி 8 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. சென்னை அணி வீரர்கள் மிகவும் அட்டகாசமாக பந்தை வீசினார்கள் என்றே கூறலாம். குறிப்பாக  துஷார் தேஷ்பாண்டே முக்கிய பங்கு வகித்தார்.

unknown node

துஷார் தேஷ்பாண்டே ரோஹித் சர்மா, டிம் டேவிட் போன்ற பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். 4-வது ஓவரில் ரோஹித் ஷர்மாவை கிளீன் பவுல்டு செய்த துஷார் தேஷ்பாண்டே, இந்நிலையில், இந்த போட்டி முடிந்த பிறகு  துஷார் தேஷ்பாண்டே ரோஹித் சர்மாவின் விக்கெட்டை எடுப்பது எளிது, அவர் விராட் கோலி அல்லது ஏபி டி வில்லியர்ஸ் போல் இல்லை என்று பேசியதாக” தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது.

unknown node

இந்த தகவல் உண்மையா..? அல்லது வதந்தியா என தெரியாமல் ரோஹித் சர்மா ரசிகர்கள் துஷார் தேஷ்பாண்டேவை திட்டி தீர்த்து வருகிறார்கள். இதனையடுத்து, இது வதந்தி தகவல் என்றும் இப்படியான தகவலை பரப்பவேண்டாம் எனவும் துஷார் தேஷ்பாண்டே கூறியுள்ளார்.

unknown node

இது குறித்து இன்ஸ்டாவில் துஷார் தேஷ்பாண்டே ” நான் பேசியதாக பரவும் அனைத்தும் பொய்யான செய்தி. அனைத்து லெஜென்ட்கள் மீதும் மரியாதை வைத்துள்ளேன்; இத்தகைய மோசமான கருத்துகளை நான் கூறவில்லை, கூறவும் மாட்டேன் ” என துஷார் விளக்கம் கொடுத்துள்ளார்.