இந்தியா – இங்கிலாந்து நேற்றைய 50 ஓவர் போட்டியின் செய்தி துளிகள்... ரோஹித்தின் இமாலய சாதனைகள்...

சர்வதேச போட்டிகளில் 250 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என பல்வேறு சாதனைகளை நேற்று கேப்டன் ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் 250 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என பல்வேறு சாதனைகளை நேற்று கேப்டன் ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டி தொடர், டி20 தொடர்,  ODI தொடர் ஆகியவற்றில் பங்கேற்று வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் 2-2 என சமன் செய்து, டி20 தொடரை 2-1 என்கிற கணக்கில் கைப்பற்றி, நேற்றைய ODI தொடரின் முதல் போட்டியை அபார வெற்றியுடன் துவக்கியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

unknown node

நேற்றைய போட்டியில் பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணி, சிறப்பாக செயல்பட்டது என்பதை விட பும்ரா தனது சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்து அணியினை கதிகலங்க வைத்தார் என்பதே உண்மை.

நேற்றைய போட்டியில்  பும்ரா 7.2 ஓவரில் 6 விக்கெட் எடுத்து வெறும் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தார். இது அவரது சிறப்பான பந்துவீச்சில் இது மிக போட்டியாக அமைந்துள்ளது.

இந்திய அணி நேற்று 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 58 பந்தில் 76 ரன்கள் எடுத்திருந்தார். 6 பவுண்டரி, 5 சிக்ஸர்களும் அடங்கும். தவான் தனது பங்கிற்கு 31 ரன்கள் எடுத்திருந்தார்.

unknown node

நேற்றடித்த 5 சிக்ஸர்கள் மூலம் ரோஹித் சர்மா, சர்வதேச போட்டிகளில் 250 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்கிற பெருமையை பெற்றுள்ளார்.   ஒரு அயல்நாட்டு வீரர் இங்கிலாந்தில் அதிக அரை சதம் அடித்த வீரர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார். அவர் 25 போட்டிகளில் விளையாடி 7 அரை சதம், 7 சதம் அடித்துள்ளார் இங்கிலாந்தில் மட்டும்.

தொடக்க வீரராக களமிறங்கி இதுவரை 60 முறை 50க்கு மேற்பட்ட ரன்களை அடித்த முதல் வீரர் என்கிற பெருமையை பெற்றுள்ளார். ஹாஷிம் அம்லா 56 முறையும், தவான் 52 முறையும் 50க்கு மேற்பட்ட ரன்களை விளாசி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

unknown node

மேலும், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ODI போட்டிகளில் மட்டும் ரோஹித் சர்மா 126 சிக்சர்களை விளாசியுள்ளார். இதே போல 5 ஆண்டுகளில் கிறிஸ் கெய்ல் 93 சிக்சர்களையும் ஜானி பேர்ஸ்டோ 79 சிக்சர்களையும் தான் விளாசியுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.

ஷிகர் தவானும், ரோஹித் சர்மாவும் சேர்ந்து 114 ரன்கள் எடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி மொத்தமாக 5000 ரன்களை கடந்த 4வது ஜோடி என்கிற பெருமையை பெற்றுள்ளாது. நேற்று தவான் – ரோஹித் 18வது 100 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். இதற்கு முன்னர் சச்சின் – கங்குலி 26 முறை 100 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். விராட் கோலியும் – ரோஹித்தும் சேர்ந்து 80 போட்டிகளில் இணைந்து விளையாடி 18 முறை 100 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.