கேப்டன் & பேட்டிங் இரண்டிலும் சிறந்தவர் ரோகித் சர்மா ..!இந்திய அணி முன்னாள் கேப்டன் புகழாரம்

ரோகித் சர்மா தன்னை சிறந்தவர் என்பதை நிரூபித்து வருகிறார் என்று  இந்திய அணி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மா தன்னை சிறந்தவர் என்பதை நிரூபித்து வருகிறார் என்று  இந்திய அணி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துபாயில் நடைபெற்று வருகிறது.

இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் விளையாடி வருகிறது.விளையாடிய 3 போட்டிகளிலுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்திய அணி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்  ரோகித் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,ரோகித் சர்மா கேப்டன் மற்றும் பேட்டிங் பணியில்  சிறப்பாக செயல்பட்டுவருகிறார். தற்போது கேப்டன் பதவியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். பேட்டிங்கில் பொறுப்பாக விளையாடி தன்னை சிறந்தவர் என்பதை நிரூபித்து வருகிறார் என்று  இந்திய அணி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.