தோனி ஓய்வு பெற்றதிலிருந்து சாஹலும் நானும் ஒன்றாக விளையாடியதில்லை – குல்தீப் யாதவ்..!!

Kuldeep Yadav says Sahal and I have never played together since Dhoni retired

தோனி ஓய்வு பெற்றதிலிருந்து சாஹலும் நானும் ஒன்றாக விளையாடியதில்லை என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஜோடி இந்தியாவுக்கான சிறந்த ஸ்பின்னர்களாக ஒரு காலம் இருந்தார்கள். இவர்கள் இருவர்க்கும் கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாட சரியாக வாய்ப்பு கிடைக்காததால் கவலையில் உள்ளனர்.

அடுத்ததாக இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளது. டி-20 தொடர்களில் கலந்துகொள்வதற்காக இந்தியா ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் யுஸ்வேந்திர சாஹல் ஜோடிக்கு பதிலாக மீண்டும் அணியில் ஜடேஜா – ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,  2019ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணிக்காகக் கடைசியாக  குல்தீப் யாதவ் ஜனவரி மாதத்தில் விளையாடினர். கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து சமீபத்தில் குல்தீப் யாதவ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது ” மஹி பாய் இருந்தபோது, நானும் சாஹலும் விளையாடிக் கொண்டிருந்தோம். மஹி பாய் வெளியேறியதிலிருந்து, சஹலும் நானும் ஒன்றாக விளையாடியதில்லை. அவர் வெளியேறிய பிறகு நான் ஒரு சில விளையாட்டுகளை மட்டுமே விளையாடினேன்” என்று தெரிவித்துள்ளார்.